நாசிக் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஆசிரியர் பலி
நாசிக் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஆசிரியர் உயிரிழந்தார்;
நாசிக்,
துலேவை சேர்ந்த பள்ளிக்கூட ஆசிரியர் ராஜேந்திரா. இவர் கல்வான் தாலுகா போர்காவ் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை இவர் துலே மாவட்டம் முல்காவில் இருந்து கல்வான் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நாசிக் மாவட்டம் தியோலா, சிவ் நல்லா அருகே சின்சாவாட்-நிம்போலா சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பின்னால் வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விட்டு நி்ற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த போது வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து தியோலா போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற கார் டிரைவரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.