டாக்சி கட்டணம் ரூ.3 அதிகரிப்பு ; ஆட்டோவுக்கு ரூ.2 உயர்வு
மும்பையில் டாக்சி கட்டணம் ரூ.3-ம், ஆட்டோ கட்டணம் ரூ.2-ம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வு 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மும்பை,
மும்பையில் டாக்சி கட்டணம் ரூ.3-ம், ஆட்டோ கட்டணம் ரூ.2-ம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வு 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
கட்டணம் அதிகரிப்பு
சி.என்.ஜி. விலை உயர்வு காரணமாக ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என டிரைவர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் மாநில அரசு மும்பை பெருநகரில் ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்தி உள்ளது.
குறைந்தபட்ச டாக்சி கட்டணம் ரூ.3-ம், ஆட்டோ கட்டணம் ரூ.2-ம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் ரூ.28
இதன்படி டாக்சியில் 1.5 கி.மீ. பயணம் செய்ய குறைந்தபட்ச கட்டணம் ரூ.25-ல் இருந்து ரூ.28 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 1.5 கி.மீ. பிறகு ஒரு கி.மீ.க்கு ரூ.18.66 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த கட்டணம் ரூ.16.93 ஆக உள்ளது.
இதேபோல ஆட்டோ குறைந்தபட்ச கட்டணம் ரூ.21-ல் இருந்து ரூ.23 ஆக உயர்ந்து உள்ளது. 1.5 கி.மீ.க்கு பிறகு ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.15.33 கட்டணமாகும். தற்போது இந்த கட்டணம் ரூ.14.20 ஆக உள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.