நாடாளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் 45 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு - பா.ஜனதா மாநில தலைவர் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் 45 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயம் செய்து உள்ளதாக பா.ஜனதா மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறினார்.

Update: 2023-10-17 19:45 GMT

மும்பை, 

நாடாளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் 45 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயம் செய்து உள்ளதாக பா.ஜனதா மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறினார்.

45 தொகுதியில் வெற்றி பெற இலக்கு

நாடாளுமன்ற ேதர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக தற்போதே அரசியல் கட்சிகள் காய்களை நகர்த்த தொடங்கி உள்ளன. இந்தநிலையில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் பா.ஜனதா, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரசின் அஜித்பவார் அணி மற்றும் சிறிய கட்சிகள் அடங்கிய மகா யுதி கூட்டணி மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் 45-ல் வெற்றி பெற இலக்கு நிர்ணயம் செய்து உள்ளதாக பா.ஜனதா மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறியுள்ளார்.

முழு பலத்தை காட்டுவோம்

இது குறித்து அவர் நேற்று தானேயில் கூறியதாவது:- மராட்டியத்தில் 45 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற மகா யுதி கூட்டணி இலக்கு நிர்ணயித்து உள்ளது. கூட்டணி வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெற பா.ஜனதா தனது முழு பலத்தையும் 48 தொகுதிகளிலும் காட்டும். இதேபோல அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா கூட்டணி 225 தொகுதிகளில் வெற்றி பெறும். தேர்தலில் 51 சதவீத வாக்குகள் பெற முயற்சி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்