வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை- போலீசார் எச்சரிக்கை

வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மும்பை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-06-25 17:56 GMT

மும்பை,

வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மும்பை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மும்பை 144 தடை

சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாமில் முகாமிட்டு உள்ளார். இதையடுத்து சிவசேனா தொண்டர்கள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக போராடுவதுடன் தாக்குதல் சம்பங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக மும்பையில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம் நிலவியது. எனவே மும்பையில் அசாம்பாவிதங்களை தடுக்கும் வகையில் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை 144 உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நகரில் 5 அல்லது 5-க்கும் மேற்பட்டவர்கள் பொது இடங்களில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

இது தொடர்பாக மும்பை கமிஷனர் சஞ்சய் பாண்டே தலைமையில் நடந்த கூட்டத்தில் போலீசார் உஷாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், " போலீசார் உஷாா் நிலையில் இருந்து நகரில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொண்டர்களின் போராட்டம், கூட்டம் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிந்து கொள்ளும் வகையில் போலீசார் உள்ளூர் அரசியல் தலைவர்களுடன் தொடர்பில் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது. இதேபோல சமூகவலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவுகள் பரவுவதை காகாணித்து வருகிறோம்.

அரசியல் கட்சியினர் பொது சொத்துக்களை சேதப்படுத்துவதை தடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது " என்றார்.

இதேபோல நகரில் பேனர்கள் வைக்கவும், ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தவும், பட்டாசு வெடிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்