லாரி மோதி ராணுவ வீரர் பலி; மந்திரி சகன் புஜ்பால் நேரில் அஞ்சலி
நாசிக் அருகே லாரி மோதிய விபத்தில் ராணுவ வீரர் பலியானார். மந்திரி சகன்புஜ்பால் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்
நாசிக்,
நாசிக் நிப்பாட் தாலுகா கடக் மலேகாவ் பகுதியை சேர்ந்த யோகேஷ் ஷிண்டே. ராணுவ வீரரான இவர் குடும்பத்துடன் போலா பண்டிகை கொண்டாட விடுமுறை எடுத்து சொந்த ஊர் வந்திருந்தார். கடந்த 15-ந்தேதி வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அப்போது வாசன்காவ் சாலையில், எதிரே வந்த லாரி ஒன்று இவரது மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த யோகேஷ் ஷிண்டே ரத்த வெள்ளத்தில் பலியானார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு தியோலாலி ராணுவ முகாமிற்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை நிறைவு பெற்ற பின்னர் நேற்று முன்தினம் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இவரது உடலுக்கு மந்திரி சகன்புஜ்பால் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.