இர்சல்வாடியில் மீட்பு பணியில் ஈடுபட்ட தானே தீயணைப்பு படையினருக்கு ஷிண்டே பாராட்டு
இர்சல்வாடி மீட்பு பணியில் ஈடுபட்ட தானே தீயணைப்பு படை வீரர்களுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பாராட்டு தெரிவித்துள்ளார்;
தானே,
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று முன்தினம் நள்ளிரவு தானே சிவசேனா அலுவலகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடியை ஏற்றினார். விழாவில் அவர் நிலச்சரிவு ஏற்பட்டு மண்ணில் புதைந்த இர்சல்வாடி கிராமத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட தானே பேரிடர், தீயணைப்பு படையினரை பாராட்டினார். பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். விழாவில் தானே முன்னாள் மேயர் நரேஷ் மாஸ்கே, பிரதாப் சர்நாயக் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.