ரூ.1 கோடி திமிங்கல உமிழ்நீர் கட்டி பறிமுதல்; என்ஜினீயரிங் பட்டதாரி உள்பட 2 பேர் கைது

மும்பையில் ரூ.1 கோடி திமிங்கல உமிழ்நீர் கட்டியுடன் என்ஜினீயரிங் பட்டதாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-29 18:45 GMT

மும்பை, 

மும்பையில் ரூ.1 கோடி திமிங்கல உமிழ்நீர் கட்டியுடன் என்ஜினீயரிங் பட்டதாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரூ.1 கோடி திமிங்கல உமிழ்நீர்

மும்பை பாந்திரா மேக்வாடி போலீஸ் நிலையத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ்காரராக இருப்பவர் பிரவீன் சாய்ன்தானே. அந்தேரி பகுதியில் சிலர் திமிங்கல உமிழ்நீர் கட்டியுடன் சுற்றித்திரிவதாக போலீஸ் உளவாளி மூலம் பிரவீன் சாய்ன்தானேக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக விரைந்து சென்ற போலீசார் அந்தேரி கிழக்கு செர்-இ-பஞ்சாபி காலனி பகுதியில் 2 பேரை பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான 1 கிலோ திமிங்கல உமிழ்நீர் கட்டி பறிமுதல் செய்யப்பட்டது.

2 பேர் கைது

விசாரணையில் பிடிப்பட்டவர்கள் ரத்னகிரியை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி ருபேஷ் ராம் பவார் (வயது35), மாகிம் கோலிவாடாவை சேர்ந்த பிரவின்யா பிரதீப் காலே (26) என்பது தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திமிங்க உமிழ்நீர் இவர்களுக்கு எப்படி கிடைத்தது, யாருக்கு விற்பனை செய்ய இருந்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பர்கிரிஸ் என அழைக்கப்படும் திமிங்கல உமிழ்நீர் கட்டி வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. எனவே அதற்கு சர்வதேச சந்தையில் அதிக மதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்