மாநிலங்களவை எம்.பி. தேர்தல்- சிவசேனா சார்பில் சஞ்சய் ராவத், சஞ்சய் பவார் நாளை வேட்பு மனு
மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் சிவசேனா சார்பில் சஞ்சய் ராவத், சஞ்சய் பவார் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.
மும்பை,
மராட்டியத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களான பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரி பியூஷ் கோயல், வினய் சகஸ்ரபுதே, விகாஸ் மகாத்மே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம், தேசியவாத காங்கிரசை சேர்ந்த பிரபுல் படேல் மற்றும் சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ராவத் ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 4-ந் தேதி முடிவடைகிறது.
இந்த பதவிகளுக்கு ஜூன் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களவை தேர்தலில் சிவசேனா சார்பில் தானும், சிவசேனாவின் கோலாப்பூர் மாவட்ட தலைவரான சஞ்சய் பவாரும் வியாழக்கிழமை (நாளை) வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.