மோசடி வழக்கில் 'சாய்ராட்' பட நடிகரிடம் விசாரணை- போலீஸ் அதிகாரி தகவல்

போலி ஆவணங்களை தயாரித்ததாக மோசடி வழக்கில் ‘சாய்ராட்’ பட நடிகரிடம் விசாரணை

Update: 2022-09-15 17:36 GMT

மும்பை,

அவுரங்காபாத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் ரூ.5 லட்சம் தந்தால் தலைமை செயலகமான மந்திராலயாவில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கும்பல் ஒன்று சமீபத்தில் அணுகியது. அவர்கள் பேச்சை நம்பிய நபர் ரூ.2 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தார். ஆனால் அவர்கள் தன்னை ஏமாற்றுவதை உணர்ந்துகொண்ட நபர் இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் பணமோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றினர்.

விசாரணையின்போது கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகள் நடிகர் சூரஜ் பவாரின் உதவியுடன் போலி ஆவணங்களை தயாரித்ததாக தெரிவித்துள்ளனர்.

எனவே நடிகர் சூரஜ் பவாரிடம் விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூரஜ் பவார் நாகராஜ் மஞ்சுலே இயக்கத்தில் வெளிவந்து புகழ்பெற்ற மராத்தி படமான "சாய்ராட்" படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஆவார்.

Tags:    

மேலும் செய்திகள்