டெம்போவில் கடத்தி வரப்பட்ட ரூ.24 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - டிரைவர் கைது

டெம்போவில் கடத்தி வரப்பட்ட ரூ.24 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்;

Update: 2023-10-13 18:45 GMT

தானே, 

தானே காரேகாவ் சுங்கச்சாவடி வழியாக தடைசெய்யப்பட்ட பான்மாசாலா, புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவத்தன்று போலீசார் வாகனங்களை கண்காணித்து வந்தனர். அப்போது சரக்குகள் ஏற்றி வந்த டெம்போ சென்றதை கண்ட போலீசார் சந்தேகத்தின் பேரில் வழிமறித்தனர். டெம்போ ஓட்டி வந்த டிரைவர் மஞ்சித் குமார் என்பவரிடம் விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் டெம்போவில் சோதனை நடத்தினர். அதில் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.24 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து டெம்போ டிரைவரை கைது செய்தனர். மேலும் இவற்றை எங்கிருந்து கடத்தி கொண்டு வந்தார் என்பது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்