'சமூகத்தில் பாகுபாடு இருக்கும்வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும்'

சமூகத்தில் பாகுபாடு இருக்கும்வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்

Update: 2023-09-06 19:45 GMT

நாக்பூர்,

நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சமூக அமைப்பில் சக மனிதர்களை நாம் பின்தங்க வைத்துள்ளோம். நாம் அவர்களை பற்றி எப்போதும் கவலைப்படவில்லை. 2 ஆயிரம் ஆண்டுகளாக இந்த நிலை தொடர்கிறது. நாம் அவர்களுக்கு சமத்துவத்தை வழங்கும்வரை சில சிறப்பு சலுகைகளை வழங்க வேண்டும். இதில் இடஒதுக்கீடும் ஒன்றாகும். எனவே பாகுபாடுகள் இருக்கும் வரை இட ஒதுக்கீடு தொடர வேண்டும்.

அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடுகளுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முழு ஆதரவு அளிக்கிறது. பாகுபாடுகளை எதிர்கொண்ட சமூக பிரிவினர் 2 ஆயிரம் ஆண்டுகள் பாதிப்புகளை எதிர்கொண்டனர். இந்த நிலையில் நாம் ஏன் இன்னும் 200 ஆண்டுகள் சில பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ளக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்