அரியானாவிற்கு கடத்தப்பட்ட 13 வயது சிறுமி மீட்பு

13 வயது சிறுமியை கடத்தி சென்ற டியூசன் ஆசிரியர் அரியானாவில் சிக்கினார்.;

Update:2022-05-23 20:47 IST

அம்பர்நாத், 

13 வயது சிறுமியை கடத்தி சென்ற டியூசன் ஆசிரியர் அரியானாவில் சிக்கினார்.

சிறுமி கடத்தல்

தானே மாவட்டம் கல்யாண் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 1-ந் தேதி காணாமல் போய் விட்டாள். பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி டியூசன் வகுப்பிற்கு செல்வது வழக்கம். சிறுமி காணாமல் போன தினத்தில் டியூசன் வகுப்பு ஆசிரியரும் மாயமாகி விட்டார்.

இதனால் அவரது செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்ற போது அரியானா மாநிலம் பரிதாபாத்திற்கு சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் அரியானா போலீசாருக்கு புகைப்படத்தை அனுப்பி வைத்தனர்.

மீட்பு

போலீசார் விசாரணை நடத்தி அங்கு பதுங்கி இருந்த டியூசன் ஆசிரியரை பிடித்து கைது செய்தனர்.

மேலும் சிறுமியை போலீசார் மீட்டனர். இதையடுத்து இருவரையும் கல்யாண் அழைத்து வர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்