நாக்பாடாவில் 8 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு - 2 பேர் கைது

நாக்பாடாவில் 8 குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2023-08-30 19:45 GMT

மும்பை, 

மும்பை நாக்பாடா மதன்புராவில் பை தயாரிக்கும் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்தி வருவதாக தனியார் தொண்டு நிறுவனத்திற்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்படி போலீசார் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடன் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். அங்கு 14 முதல் 16 வயதுடைய 8 சிறுவர்களை மீட்டனர். நேபாள நாட்டை சேர்ந்த சிறுவர்களை 10 முதல் 12 மணி நேரம் வேலையில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 8 சிறுவர்களை மீட்டு மாட்டுங்காவில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்