நோய்வாய்பட்டு படுக்கையில் இருந்த மூதாட்டியை கொலை செய்த உறவுக்காரர் கைது

நோய்வாய்பட்டு படுக்கையில் இருந்த மூதாட்டியை கொலை செய்ததாக உறவுக்காரர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-08-25 17:58 IST

மும்பை,

நோய்வாய்பட்டு படுக்கையில் இருந்த மூதாட்டியை கொலை செய்ததாக உறவுக்காரர் கைது செய்யப்பட்டார்.

மூதாட்டி

மும்பை பைகுல்லா பகுதியை சேர்ந்த பெண் சாந்தன் பெர்னாண்டஸ்(வயது 69). இவர் தனது உறவினரான அந்தோணி பெஞ்சமின்(39) என்பவருடன் வசித்து வந்தார். சாந்தன் பெர்னாண்டஸ் நோய்வாய்ப்பட்டு படுத்த, படுக்கையாக இருந்தார்.

இந்தநிலையில் அந்தோணி பெஞ்சமினின் சகோதரருக்கு வங்கி கடன் வாங்க சாந்தன் பெர்னாண்டஸ் உதவியதாக தெரிகிறது. இது அந்தோணி பெஞ்சமினுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதனால் நோய்வாய்பட்டவர் என்றும் பாராமல் படுக்கையில் இருந்த சாந்தன் பெர்னாண்டசை அவர் கடுமையாக தாக்கி உள்ளார். இதனால் அவர் மூர்ச்சையானதாக தெரிகிறது.

காட்டிக்கொடுத்த மனைவி

இந்த நிலையில் அந்தோனி பெஞ்சமினின் மனைவி அவர் மூச்சு, பேச்சு இன்றி அசைவற்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் உயிரிழந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உறவுக்கார பெண்ணான மூதாட்டியை கொலை செய்த அந்தோணி பெஞ்சமினை கைது செய்தனர். போலீசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்