தாதரில் பிளாட்பாரம் அகலப்படுத்தும் பணி: நாளை முதல் பரேலில் இருந்து மின்சார ரெயில் சேவை இயக்கம்

தாதர் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் அகலப்படுத்தும் பணி நடைபெறுவதால் நாளை முதல் பரேலில் இருந்து மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.;

Update: 2023-09-13 20:15 GMT

மும்பை, 

தாதர் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் அகலப்படுத்தும் பணி நடைபெறுவதால் நாளை முதல் பரேலில் இருந்து மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

தாதர் ரெயில் நிலையம்

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் தாதர் ரெயில் நிலையம் முக்கியமாக கருதப்படுகிறது. காலை மற்றும் மாலை வேளைகளில் தாதர் ரெயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவதுண்டு. அவ்வப்போது ரெயிலில் தொற்றி கொண்டு செல்லும் பயணிகள் கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதன் காரணமாக தாதர் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் நம்பர் 1-ல் அகலப்படுத்தும் பணி ரெயில்வே சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மேற்கொள்ளப்பட உள்ளது.

ரூ.1 கோடி செலவில்...

இது தொடர்பாக ரெயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தற்போது உள்ள பிளாட்பாரம் நம்பர் 1 குறுகிய அளவில் 7 மீட்டர் இருப்பதால் அதனை 10.5 மீட்டர் அளவிற்கு அகலப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த சீரமைப்பு பணிக்கு சுமார் ரூ.1 கோடி செலவிடப்பட உள்ளது. இதனால் பிளாட்பாரம் நம்பர் 2-ல் நிறுத்தப்படும் மின்சார ரெயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதற்கு மாறாக வெள்ளிக்கிழமை முதல் பரேலில் இருந்து ரெயில்கள் புறப்பட்டு செல்லும். இந்த பணிகள் நிறைவடைய 2 மாதங்கள் ஆகும் என்பதால் பயணிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்