மாடல் அழகியை பலாத்காரம் செய்த புகைப்பட கலைஞர் கைது
மாடல் அழகியை பலாத்காரம் செய்த புகைப்பட கலைஞர் கைது செய்யப்படடார்.
மும்பை,
மும்பையை சேர்ந்த 30 வயது மாடல் அழகி ஒருவர் இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார். அப்போது ஹிமால் மேத்தா என்ற புகைப்பட கலைஞர், மாடல் அழகியிடம் வெப் சீரியலில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி அந்தேரியில் உள்ள ஓட்டலுக்கு கடந்த ஜனவரி மாதம் வரவழைத்தார். பின்னர் மாடல் அழகியை ஆபாசமாக புகைப்படம் எடுத்தார். குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்தார். மேலும் 8 மாதமாக ஆபாச புகைப்படத்தை வைத்து மிரட்டி அவரை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த மாடல் அழகி போலீசில் புகார் அளித்தார். டி.என்.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து புகைப்பட கலைஞர் ஹிமால் மேத்தாவை கைது செய்தனர்.