கல்யாண் அருகே ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்ற வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்
கல்யாண் அருகே ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்ற பயணி தவறி விழுந்து பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர்.;
தானே,
கல்யாண் அருகே ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்ற பயணி தவறி விழுந்து பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
ஓடும் ரெயிலில் இருந்து குதித்தனர்
கல்யாண் ரெயில் நிலையத்தில் நேற்று காலை 9.30 மணி அளவில் புனேயில் இருந்து மும்பை நோக்கி சென்ற டெக்கான் குயின் எக்ஸ்பிரஸ் மெதுவாக சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் கல்யாணில் நிறுத்தம் இல்லாததால் பெட்டியில் இருந்த 3 பயணிகள் திடீரென ஓடும் ரெயிலில் இருந்து பிளாட்பாரம் நம்பர் 7-ல் குதித்தனர். அப்போது நிலை தடுமாறிய 3 பேரும் தண்டவாளத்தில் விழுந்தனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 2 பேர் படுகாயமடைந்தனர்.
வாலிபர் பலி
இது பற்றி தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், பலியானவர் பாருக் அன்சாரி (வயது25) என தெரியவந்தது. இந்த சம்பவத்தால் சுமார் 20 நிமிடம் அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.