புனேயில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி

புனே கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள 2 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி.

Update: 2023-06-27 19:00 GMT

புனே, 

புனே கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள 2 மாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் திடீரென கட்டிட சிலாப் இடிந்து விழுந்தது. இதனால் முதல் மாடியில் இருந்த சிலாப்பும் இடிந்து தரை தளத்தில் விழுந்தது. இதில் அந்த குடியிருப்பில் வசித்து வந்த பெண் உள்பட 2 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒருவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். காயமடைந்த பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பலியானவர் ஸ்டான்லி டிசோசா (வயது50) எனவும், காயமடைந்தவர் ஜெர்ரி டிசோசா (60) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சேதமடைந்த கட்டிடத்தை இடிக்கும் பணியில் புனே மாநகராட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்