ஆனந்த சதுர்த்தியையொட்டி புனேயில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

ஆனந்த சதுர்த்தியையொட்டி புனேயில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

Update: 2022-09-08 16:38 GMT

புனே,

ஆனந்த சதுர்த்தியையொட்டி புனேயில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

போலீஸ் பாதுகாப்பு

ஆனந்த சதுர்த்தி தினத்தையொட்டி புனேயில் பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இது பற்றி போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா தெரிவிக்கையில், "நகரில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 8 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறைகள் மூலம் கண்காணிக்கப்படும். சிலை கரைப்பிற்காக ஊர்வலம் வரும் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று வழிப்பாதைகளில் திருப்பி விடப்படும்.

ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி

புனேயில் 3 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட கணபதி மண்டல்கள் சிலை கரைப்பு செய்கிறது. இங்கு நள்ளிரவு வரையில் ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். சுப்ரீம் கோர்ட்டு விதித்த அனைத்து வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படும்" என்றார்.

கடந்த 2 ஆண்டுக்கு பிறகு ஆனந்த சதுர்த்தி விழா நடைபெற இருப்பதால் ஊர்வலங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்