போதைப்பொருள் வழக்கு பின்னணியை அம்பலப்படுத்தியதற்காக நவாப் மாலிக் விலை கொடுக்கிறார்- சஞ்சய் ராவத் கருத்து

போதைப்பொருள் வழக்கு பின்னணியை அம்பலப்படுத்தியதற்காக நவாப் மாலிக் விலை கொடுக்கிறார் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார.

Update: 2022-05-29 17:41 GMT

மும்பை,

சொகுசு கப்பல் போதை விருந்து வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நிருபர்களிடம் கூறியதாவது:-

போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பணம் பறிப்பதற்காக ஆர்யன் கானை வழக்கில் சிக்க வைத்ததாக மந்திரி நவாப் மாலிக் கூறியிருந்தார். அது தற்போது நிரூபணம் ஆகி உள்ளது. இதற்காக நவாப் மாலிக்கை நான் வாழ்த்துகிறேன். ஆனால் போதைப்பொருள் வழக்கின் பின்னணி மற்றும் பா.ஜனதாவின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்தியதற்காக நவாப் மாலிக் விலை கொடுத்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மந்தரி நவாப் மாலிக் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்