நடுவானில் நாசிக் விமானத்தில் கோளாறு- அவசர தரையிறக்கம்

நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இந்த விமானத்தில் ‘தானியங்கி பைலட்’ அமைப்பில் கோளாறு காரணமாக அவசர தரையிறக்கம்;

Update:2022-09-01 23:01 IST

மும்பை,

தலைநகர் டெல்லியில் இருந்து மராட்டிய மாநிலம் நாசிக்கிற்கு ஸ்பைஸ் ஜெட் தனியார் விமானம் நேற்று காலை புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இந்த விமானத்தில் 'தானியங்கி பைலட்' அமைப்பில் கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த விமானத்தை டெல்லிக்கு திருப்பி அவசரமாக தரையிறக்க விமானி முடிவு செய்தார்.

டெல்லி விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்து விட்டு அவர் அவசரமாக அந்த விமானத்தை டெல்லிக்கு திருப்பி தரையிறக்கினார். இதனால் பயணிகள் மத்தியில் பதற்றம் நிலவியது.

இருப்பினும் பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்