மாணவியை மானபங்கம் செய்த இசை ஆசிரியர் கைது
பள்ளி மாணவியை மானபங்கம் செய்த இசை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்
மும்பை,
மும்பை புறநகர் பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி அங்குள்ள இசை பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தாள். அங்கு ஆசிரியராக இருந்த சித்தார்த் சிங் (வயது26) என்பவர் மாணவியின் சமூகவலைத்தளத்தில் பின்தொடர்ந்து குறுந்தகவல் அனுப்பி வந்தார். பின்னர் மாணவியை பள்ளியில் வைத்து மானபங்கம் செய்ததாக தெரிகிறது. இதனால் மனஉளைச்சல் அடைந்த மாணவி சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தாள். இதையடுத்து பெற்றோர் சார்க்கோப் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு ஆசிரியர் சித்தார்த் சிங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.