உடல் சூட்கேசில் கிடந்த வழக்கு: கற்பழிப்பு புகாரை வாபஸ் பெற மறுத்ததால் பெண் கொலை - சினிமா கலைஞர் வெறிச்செயல்

கற்பழிப்பு புகாரை வாபஸ் பெற மறுத்ததால் பெண் கொலை செய்யப்பட்டார். உடன் வசித்த சினிமா கலைஞர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்.;

Update:2023-09-13 00:30 IST

வசாய், 

கற்பழிப்பு புகாரை வாபஸ் பெற மறுத்ததால் பெண் கொலை செய்யப்பட்டார். உடன் வசித்த சினிமா கலைஞர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்.

பெண் பிணம்

குஜராத் மாநிலம் வல்சாட் அருகே கழிமுக பகுதியில் கடந்த மாதம் மர்ம சூட்கேஸ் கிடந்தது. இதை போலீசார் கைப்பற்றி திறந்து பார்த்தபோது பெண்ணின் உடல் உள்ளே இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பெண் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் பால்கர் மாவட்டம் நைகாவ் பகுதியை சேர்ந்த நைனா (வயது28) என்பதும், மேக்அப் கலைஞரான இவர் வசாயை சேர்ந்த சினிமா கலைஞரான கிராபிக் டிசைனர் மனோகர் சுக்லா (43) என்பவருடன் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது.

கற்பழிப்பு புகார்

இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். கொலையான பெண் நைனா தன்னை பலாத்காரம் செய்ததாக மனோகர் சுக்லா மீது போலீசில் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரை வாபஸ் பெறுமாறு மனோகர் சுக்லா தெரிவித்தார். இதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது. இதற்கு பழிவாங்க அவர் நைனாவை கடத்தி சென்று கொலை செய்து பிணத்தை சூட்கேசில் அடைத்து வீசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மனோகர் சுக்லாவை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்