மீண்டும் எம்.பி. ஆன ராகுல் காந்திக்கு மும்பையில் பாராட்டு விழா - நானா படோலே தகவல்

மீண்டும் எம்.பி. ஆன ராகுல் காந்திக்கு மும்பையில் பாராட்டு விழா நடத்த உள்ளதாக நானா படோலே கூறியுள்ளார்

Update: 2023-08-29 20:00 GMT

மும்பை, 

இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி மும்பை வர உள்ளனர். இதில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் மீண்டும் எம்.பி.யான ராகுல்காந்திக்கு பாராட்டு விழா நடத்த மராட்டிய மாநில காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதுபற்றி மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. ஆனால் அவர் மோடி அரசுக்கு தலைவணங்கவில்லை. மாறாக பயப்படமாட்டேன் என்ற தகவலை பா.ஜனதாவுக்கு அனுப்பினார். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைத்துள்ளது. மும்பை வரும் ராகுல்காந்திக்கு பிரமாண்டமான முறையில் பாராட்டு விழா நடத்த உள்ளோம். அவர் மும்பையில் 2 நாட்கள் இருப்பார். இந்தியா கூட்டணி கூட்டத்தில் முக்கியமாக தொகுதி பங்கீடு பார்முலா குறித்து ஆலோசிக்கப்படும். மராட்டிய அளவில் கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை. கடந்த 2019-ம் ஆண்டு 62 சதவீத வாக்காளர்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்கவில்லை. பா.ஜனதாவுக்கு எதிரான வாக்குகளை நாங்கள் சிதறடிக்க விரும்பவில்லை. இதனால் ஒற்றிணைந்து போட்டியிடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்