பீட் மாவட்டத்தில் ஆட்டோ மீது லாரி மோதி தாய், 2 மகன்கள் பலி

பீட் மாவட்டத்தில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் தாய் மற்றும் 2 மகன்கள் பலியாகினர்;

Update: 2023-09-11 19:30 GMT

பீட், 

பீட் நகரம் இஸ்லாம்புரா பகுதியை சேர்ந்த பெண் நஸ்ரின் சேக் (வயது35). இவர் தனது மகன்கள் நுமன் (12), அட்னன் (10) ஆகியோருடன் தாரூர் தாலுகாவிற்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று முன்தினம் இரவு அங்கிருந்து ஆட்டோவில் ஏறி இஸ்லாம்புரா திரும்பி வந்தனர். பீட் தாலுகா காட்சாவ்லி கிராமம் அருகே வந்தபோது வேகமாக வந்த கன்டெய்னர் லாரி ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த தாய், 2 மகன்கள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். டிரைவர் படுகாயமடைந்தார். தகவல் அறிந்த பிம்பால்னேர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்