எம்.எல்.ஏ. பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பெண்களிடம் பேசிய கார் டிரைவர் கைது

எம்.எல்.ஏ. பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பெண்களிடம் பேசிய கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-10 19:00 GMT

மும்பை, 

எம்.எல்.ஏ. பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பெண்களிடம் பேசிய கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

எம்.எல்.ஏ. பெயரில்...

கல்யாண் கிழக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. கண்பத் கெய்க்வாட். மர்ம நபர் ஒருவர் இவரது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி, பெண்களிடம் பேசி வந்து உள்ளார். இதுதொடர்பான தகவல்கள் எம்.எல்.ஏ.க்கு தெரிய வந்தவுடன் அவர் தானே போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். புகார் குறித்து கோல்சேவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது எம்.எல்.ஏ. பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பெண்களிடம் பேசி வந்தவர் கோல்சேவாடி பகுதியை சேர்ந்த கார் டிரைவர் சந்தன் ஷிர்சேகர் (வயது28) என்பது தெரியவந்தது.

கைது

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் போலீசாரிடம் சிக்காமல் இருக்க மற்றவர்களின் வை-பை, ஹாட் ஸ்பாட் மூலம் மட்டும் இணையதளத்தை பயன்படுத்தியது தெரியவந்தது. கார் டிரைவர் அரசியல் எதிரிகளின் தூண்டுதலின் பேரில் எம்.எல்.ஏ.க்கு களங்கம் ஏற்படுத்த அவரது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பயன்படுத்தினாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்