நாலாச்சோப்ராவில் காணாமல் போன இளம்பெண் வைத்தர்ணா நதியில் பிணமாக மீட்பு

பால்கர் மாவட்டம் நாலாச்சோப்ராவில் காணாமல் போன இளம்பெண் வைத்தர்ணா நதியில் பிணமாக மீட்கப்பட்டார்

Update: 2023-08-15 19:30 GMT

வசாய், 

பால்கர் மாவட்டம் நாலாச்சோப்ராவை சேர்ந்த இளம்பெண் பூஜா துபே (வயது23). கடந்த 11-ந்தேதி முதல் காணாமல் போய் விட்டார். இதனை தொடர்ந்து அவரது பெற்றோர் துலின்ஞ் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில் பயிற்சி வகுப்பு சென்ற இளம்பெண் அதன் பிறகு வீடு திரும்பவில்லை என தெரியவந்தது. இருப்பினும் காணாமல் போன அவரை தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் வைத்தர்ணா நதியில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது பெண் உடல் ஒன்று மிதந்ததை கண்டனர். இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு நடத்திய விசாரணையில், அது காணாமல் போன பூஜா துபே என்பது தெரியவந்தது. இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்