நாலாச்சோப்ராவில் வாளால் வெட்டி ஒருவரை கொலை செய்த வாலிபர் கைது

நாலாச்சோப்ராவில் வாளால் வெட்டி ஒருவரை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-05-20 20:51 IST

வசாய்,

பால்கர் மாவட்டம் நாலாச்சோப்ரா பகுதியை சேர்ந்தவர் சாய்நாத் ஜாதவ் (வயது28). அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ரூபேஷ் தாக்கரே (18). இன்று அதிகாலை 2.30 மணி அளவில் வாலிபர் ரூபேஷ் தாக்கரே அங்கிருந்த சாய்நாத் ஜாதவின் உறவினர் ஒருவரை கழுத்தை நெரித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சாய்நாத் ஜாதவ் அவரிடம் இருந்து உறவினரை மீட்க முயன்றார்.

அப்போது திடீரென ரூபேஷ் தாக்கரே தான் வைத்திருந்த வாளால் சாய்நாத் ஜாதவை வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரூபேஷ் தாக்கரேவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்