ரெயிலில் 16 வயது சிறுமியை மானபங்கம் செய்தவர் கைது; பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

டோம்பிவிலி ரெயில் நிலையத்தில் இருந்து ரெயிலில் பயணன் செய்த 16 வயது சிறுமியை மானபங்கம் செய்த நபரை பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

Update: 2023-09-15 19:15 GMT

மும்பை, 

தானே மாவட்டம் டோம்பிவிலி ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணி அளவில் ரெயிலில் 16 வயது சிறுமி ஒருவர் பயணம் செய்தார். பெட்டியில் இருந்து இறங்க வாசற்படி அருகே வந்தபோது, சிறுமியின் பின்னால் நின்ற 45 வயது நபர் தொடக்கூடாத இடத்தில் தொட்டு மானபங்கம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போட்டாள். இதனை கண்ட அங்கிருந்த பயணிகள் ஆசாமியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசாமியை கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்