அத்தையை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை; தானே கோர்ட்டு உத்தரவு

அத்தையை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தானே கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-09-09 19:15 GMT

தானே, 

அத்தையை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தானே கோர்ட்டு உத்தரவிட்டது.

வேலையில்லாத வாலிபர்

தானே மாவட்டம் பிவண்டி வெடல்பாடாவை சேர்ந்தவர் நிசார் அகமது. இவரது மகன் இம்தியாஸ் சேக்(வயது26), வேலையில்லாமல் ஊர் சுற்றி வந்தார். மும்பை மலாடில் வசிக்கும் நிசார் அகமதுவின் சகோதரி கம்ருன்னிசா அவ்வப்போது தனது சகோதரரின் வீட்டுக்கு வருவது வழக்கம். இதேபோல கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி அன்று கம்ருன்னிசா சகோதரரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இம்தியாஸ் சேக் வீட்டில் இருந்த உணவு முழுவதையும் சாப்பிட்டு விட்டதாக கூறப்படுகிறது.

ஆயுள் தண்டனை

இதனை கண்ட கம்ருன்னிசா தனது அண்ணன் நிசார் அகமதுக்கு உணவை வைக்காமல் சாப்பிட்டதற்காக இம்தியாஸ் சேக்கை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இம்தியாஸ் சேக் அன்றைய தினம் இரவு உறங்கி கொண்டிருந்த அத்தை கம்ருன்னிசாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் தானே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் 12 சாட்சிகளிடம் நடத்திய விசாரணையில் அவர் மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்