பழம்பெரும் இந்தி நடிகர் மரணம்
பழம்பெரும் இந்தி நடிகர் ரியோ கபாடியா புற்றுநோயால் உயிரிழந்தார்
மும்பை,
பழம்பெரும் இந்தி சினிமா நடிகர் ரியோ கபாடியா. 66 வயதான அவர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இவர் 'தில் சாத்தே ஹை', 'சக் தே இந்தியா' மற்றும் 'ஹேப்பி நியூ இயர்' போன்ற படங்களின் மூலம் பிரபலம் அடைந்தார். டி.வி. நிகழ்ச்சிகளான குதா ஹாபிஸ், தி பிக்புல், ஏஜெண்ட் வினோத், சப்னே சுகானே லடக்பன் ஹே ஆகியவற்றில் துணை வேடங்களில் நடித்து இருந்தார்.
கடைசியாக 'மேட் இன் ஹெவன்" வெப் தொடரில் நடித்திருந்தார். அதில் அவர் மிருணால் தாக்கூரின் தந்தையாக தோன்றியிருந்தார். மரணம் அடைந்த ரியோ கபாடியாவுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். நடிகர் ரியோ கபாடியாவின் இறுதி சடங்கு மும்பை கோரேகாவில் உள்ள மயானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.