அடுத்த கட்சியை உடைக்காமல் சொந்த கட்சியை கட்டமைக்க கற்றுக்கொள்ளுங்கள் - பா.ஜனதா மீது ராஜ் தாக்கரே தாக்கு

அடுத்த கட்சியை உடைக்காமல் சொந்த கட்சியை கட்டமைக்க கற்றுக்கொள்ளுங்கள் என பா.ஜனதாவை, நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடுமையாக தாக்கி பேசினார்.

Update: 2023-08-16 20:00 GMT

மும்பை, 

அடுத்த கட்சியை உடைக்காமல் சொந்த கட்சியை கட்டமைக்க கற்றுக்கொள்ளுங்கள் என பா.ஜனதாவை, நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடுமையாக தாக்கி பேசினார்.

சுங்க சாவடி விவகாரம்

நவிமும்பை பன்வெல்லில் தனது கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே பேசியதாவது:- மராட்டியத்தில் பல சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. அதை சரிசெய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மும்பை- கோவா நெடுஞ்சாலை பணி 16 முதல் 17 ஆண்டுகள் ஆகியும் இன்னும் முழுமை பெறவில்லை. எங்களுடைய அமித்(ராஜ் தாக்கரேவின் மகன்) சமீபத்தில் ஒரு இடத்திற்கு சென்றபோது அங்கு சுங்க சாவடி உடைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பா.ஜனதா எங்களுக்கு அறிவுரை கூறுகிறது. பா.ஜனதா முதலில் மற்ற கட்சியை உடைக்காமல் சொந்த கட்சியை கட்டமைக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

உடைந்த கட்சிகள்

நவநிர்மாண் சேனா தலைவர் அமித் தாக்கரே சமீபத்தில் சுங்க சாவடி ஒன்றில் தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து நவநிர்மாண் சேனா தொண்டர்கள் அந்த சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். கடந்த ஆண்டு சிவசேனா கட்சி இரண்டாக உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றியது. அதேபோல சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி 2 ஆக உடைந்தது. அந்த கட்சியை சேர்ந்த அஜித்பவார் தலைமையிலான அணி பா.ஜனதா கூட்டணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்