Cமுதல்-மந்திரி ஷிண்டே தொடங்கி வைத்தார்

மும்பையில் லதா மங்கேஷ்கர் சர்வதேச இசை கல்லூரியை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தொடங்கி வைத்தார்.;

Update:2022-09-30 04:30 IST

மும்பை,

மும்பையில் லதா மங்கேஷ்கர் சர்வதேச இசை கல்லூரியை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தொடங்கி வைத்தார்.

லதா மங்கேஷ்கர் கல்லூரி

மும்பையை சேர்ந்த பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். இந்தநிலையில் மும்பையில் அவரது பெயரில் சர்வதேச இசை கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பிரபாதேவி ரவீந்திர நாட்டிய மந்திர் அரங்கில் நடந்த விழாவில், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பாரத் ரத்னா லதா தீனநாத் மங்கேஷ்கர் சர்வதேச இசை கல்லூரியை தொடங்கி வைத்தார்.

இந்த கல்லூரியில் அடுத்த மாதம் முதல் சான்றிதழ் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு முதல் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படிப்புகளுக்கான வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளது.

கலினாவில் இடம்

இதற்கிடையே கல்லூரி தொடக்க விழாவில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேசுகையில், "லதா மங்கேஷ்கர் கல்லூரிக்கு கட்டிடம் கட்ட கலினாவில் உள்ள மும்பை பல்கலைக்கழக வளாகத்தில் 7 ஆயிரம் சதுர மீட்டர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு கட்டிட பணிகள் முடியும் வரை இசை கல்லூரி பிரபாதேவியில் உள்ள பி.எல்.தேஷ்பாண்டே அகாடமி வளாகத்தில் செயல்படும்" என்றார்.

லதா மங்கேஷ்கர் கல்லூரிக்கான பாடத்திட்டம் தயாரிப்பதற்கான வழிகாட்டுதலை ஹரிபிரசாத் சவுராசியா, ஏ.ஆர்.ரகுமான், உஸ்டாத் ஜாகீர் உசேன் போன்ற பிரபல இசை பிரபலங்கள் வழங்குவார்கள் என அதிகாரி ஒருவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்