புல்லட் ரெயில் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்- ஏக்நாத் ஷிண்டே உத்தரவு

புல்லட் ரெயில் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை வருகிற 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2022-09-01 13:18 GMT

மும்பை,

புல்லட் ரெயில் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை வருகிற 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டு உள்ளார்.

பிரதமர் கனவு திட்டம்

மும்பை- ஆமதாபாத் இடையேயான புல்லட் ரெயில் திட்டம் பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாகும். கடந்த பா.ஜனதா ஆட்சியின் போது மராட்டியத்தில் புல்லட் ரெயில் திட்டப்பணிகள் வேகமாக நடந்தது. எனினும் 2019-ல் உத்தவ் தாக்கரே ஆட்சிக்கு வந்தவுடன் புல்லட் ரெயில் திட்டத்துக்காக மாநிலத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி தாமதமாகியது.

தற்போது ஆட்சி மாறி உள்ளதால், புல்லட் ரெயில் திட்டப்பணி மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

அதிகாரிகளுக்கு உத்தரவு

இந்தநிலையில் வருகிற 30-ந் தேதிக்குள் புல்லட் ரெயில் திட்டத்துக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள தகவலில், "வருகிற 30-ந் தேதிக்குள் மும்பை- ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்துக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தி, பாதிக்கப்படும் பொது மக்களுக்கு இழப்பீடு வழங்க முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்" என்று கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்