கைதிகளுக்காக கஞ்சா கடத்திய சிறைக்காவலர் பணி நீக்கம்

சிறை கைதிகளுக்காக கஞ்சா கடத்திய சிறைக்காவலர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-12 18:45 GMT

மும்பை, 

மும்பை ஆர்தர்ரோடு சிறையில் கைதிகளுக்காக போதைப்பொருள் கடத்தப்படுவதாக என்.எம்.ஜோஷி மார்க் போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின்பேரில் போலீசார் கடந்த 6-ந்தேதி சிறையின் நுழைவு வாயிலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு பணிக்கு வந்த சிறைக்காவலர் விவேந்திர நைக் என்பவர் சிறையில் நுழைய முயன்ற போது அவரிடம் சோதனை நடத்தினர். அப்போது போதைப்பொருள் அடங்கிய 8 கேப்சூல்கள் அவரிடம் இருந்ததை கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சிறை கைதிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விவேந்திர நைக் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பாக சிறைத்துறை விசாரணை நடத்தியது. இதில் விவேந்திர நைக் சிறைக்குள் கஞ்சா கடத்தியது உறுதியானது. இதையடுத்து அவரை சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அதிரடியாக பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்