கவச உடைகள் வாங்கியதில் முறைகேடு: மும்பை மாநகராட்சி அதிகாரிக்கு போலீசார் சம்மன்
கவச உடைகள் வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்க போலீசார் மாநகராட்சி துணை கமிஷனருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
மும்பை,
கவச உடைகள் வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்க போலீசார் மாநகராட்சி துணை கமிஷனருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
கொரோனா முறைகேடு
கொரோனா பரவலின் போது மும்பை மாநகராட்சி சார்பில் அதிக விலை கொடுத்து கவச உடைகள் (பாடி பேக்) வாங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கவச உடைகள் வாங்கியதில் ரூ.49.63 லட்சம் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த முறைகேடு புகார் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேக்கர், மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மாநகராட்சி அதிகாரிக்கு சம்மன்
இந்தநிலையில் கவச உடை வாங்கியதில் நடந்த முைறகேடு தொடர்பான புகார் குறித்து விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மும்பை மாநகராட்சி துணை கமிஷனர் ரமாகாந்த் பிராதருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். இதையடுத்து அவர் போலீசில் ஆஜராகி வாக்குமூலம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா சிகிச்சை மைய முைறகேடு ெதாடர்பாக அமலாக்கத்துறை ஏற்கனவே ரமாகாந்த் பிராதரிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.