சிறுவர்களை மிரட்டி தகாத உறவு; வாலிபர் கைது
சிறுவர்களை மிரட்டி தகாத உறவில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்;
மும்பை,
தானே மாவட்டம் உல்லாஸ்நகர் பகுதியை சேர்ந்த 11 மற்றும் 14 வயது சிறுவர்கள் சமீபத்தில் காதிவிலிக்கு பெற்றோருடன் இடம்பெயர்ந்தனர். அவர்கள் அடிக்கடி உல்லாஸ்நகருக்கு வருவது வழக்கம். அப்போது அதே பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபர் அவர்களை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார். பாதிக்கப்பட்ட சிறுவர்கள் சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர். இதன்படி பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.