அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த 3 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பிடிக்கும்; மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேச்சு
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த 3 நாடுகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் என மத்திய மந்திரி தர்மேதிர பிரதான் கூறியுள்ளார்;
புனே,
மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று புனேயில் சம்பயோசிஸ் இஷான்யா பவனை திறந்து வைத்தார். இங்கு அவர் பேசியதாவது:- இந்தியா ஒரு லட்சியம் மிக்க நாடு. நம் நாடு அடுத்த 25 ஆண்டுகளில் உலக விவகாரங்களின் மையமாக இருக்கும். நமது நாடு உலகின் வளர்ந்த முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இருக்கும். புனே சிந்தனை மற்றும் புதுமையான யோசனைகளின் நகரமாக விளங்குகிறது. வளமான வரலாற்றை கொண்ட நகரம். கல்வி மற்றும் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவதில் எப்போதும் முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் புனே நகரம் கல்வியின் மையமாக உள்ளது. ஒருவர் தனது கல்வியை வைத்து எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம், எப்படி பணம் ஈட்டலாம் என்று யோசிப்பதை விட, எனது கல்வி இந்த நாட்டிற்கும் தனது சமுதாயத்திற்கும் எந்த விதத்தில் பலன் அளிக்கும் என்று சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.