2 சிறுமிகளை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபருக்கு சாகும் வரை சிறை- பால்கர் கோர்ட்டு தீர்ப்பு

2 சிறுமிகளை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து பால்கர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2022-05-28 13:19 GMT

வசாய், 

2 சிறுமிகளை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து பால்கர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

பலாத்காரம்

பால்கர் மாவட்டத்தை சேர்ந்த 2 சிறுமிகளை மிரட்டி 35 வயதுடைய வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதற்கு சிறுமிகளின் தாயும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளில் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி தொண்டு நிறுவனத்தின் உதவியை நாடினார். இதன்பேரில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து, வாலிபர் மற்றும் உடந்தையாக இருந்த தாயையும் கைது செய்தனர்.

சாகும்வரை சிறை

மேலும் பால்கர் மாவட்ட செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை நிறைவில், வாலிபர் மீதான குற்றம் நிரூபணமானது.

இதனை தொடர்ந்து அவருக்கு சாகும் வரையில் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். மேலும் வழக்கில் சேர்க்கப்பட்ட சிறுமிகளின் தாய் மீது ஆதாரம் இல்லாததால் கோர்ட்டு அவரை விடுவித்து உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்