முஸ்லிம்களுக்கு கல்வியில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முதல்-மந்திரியிடம் பேசுவேன் - அஜித்பவார் பேச்சு

கல்வியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முதல்-மந்திரியிடம் பேசி முடிவெடுப்பேன் என அஜித்பவார் கூறினார்.

Update: 2023-09-22 19:00 GMT

மும்பை, 

கல்வியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முதல்-மந்திரியிடம் பேசி முடிவெடுப்பேன் என அஜித்பவார் கூறினார்.

இடஒதுக்கீடு

மராட்டியத்தில் கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அரசு மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியபோது, கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது. ஆனால் பின்னர் ஆட்சிக்கு வந்த பா.ஜனதா- சிவசேனா அரசு முஸ்லிம் இடஒதுக்கீட்டை கைவிட்டது. இந்த நிலையில் மாநில தலைமையகமான மந்திராலயாவில் சிறுபான்மை நலத்துறையின் கூட்டத்தில் பேசிய துணை முதல்-மந்திரி சரத்பவார் கூறியதாவது:-

முதல்-மந்திரியிடம் பேசுவேன்

மராத்தா இடஒதுக்கீடு போன்ற சிறுபான்மை சமூகத்திற்கான 5 சதவீத கல்வி இடஒதுக்கீடு சட்டரீதியாக எந்த தடைகளையும் சந்திக்கவில்லை. எனவே இந்த இடஒதுக்கீடு குறித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிசிடம் பேசி முடிவெடுப்பேன். முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள ஆசாத் கார்ப்பரேஷனுக்கு அதிக நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதன் கடன் திட்டங்களை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்துடன் இணைக்க முடியுமா என்று ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்