குழந்தை உயிரிழந்த சோகத்தில் கணவன்-மனைவி தற்கொலை

சாங்கிலியில் 18 மாத பெண் குழந்தை உயிரிழந்த சோகத்தினால் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2022-07-02 13:33 GMT

புனே, 

சாங்கிலியில் 18 மாத பெண் குழந்தை உயிரிழந்த சோகத்தினால் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

மனஉளைச்சல்

சாங்கிலி அட்பாடி தாலுகா ராஜேவாடி கிராமத்தை சேர்ந்தவர் கரண் ஹெங்காடே (வயது28). இவரது மனைவி சீத்தல் (22). தம்பதிக்கு 18 மாதமான பெண் குழந்தை இருந்தது. சம்பவத்தன்று குழந்தைக்கு உணவு ஊட்டிய போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பெற்றோர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 26-ந் தேதி உயிரிழந்தது. குழந்தை உயிரிழந்த சம்பவத்தினால் கடும் மனஉளைச்சலில் இருந்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் கிராமத்தின் உள்ள கோவில் அருகே மரத்தில் தம்பதி தூக்குப்போட்ட நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தம்பதியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவில் அருகே தற்கொலை கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். இதில் குழந்தை உயிரிழந்த சோகத்தினால் நாங்களும் குழந்தையுடன் செல்ல தற்கொலை முடிவு செய்ததாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்