பயந்தரில் வீடு இடிந்து பெண் பலி - 4 மகள்கள் காயம்
பயந்தரில் வீடு இடிந்து பெண் பலியானார். 4 மகள்கள் காயம் அடைந்தனர்.;
தானே,
பயந்தரில் வீடு இடிந்து பெண் பலியானார். 4 மகள்கள் காயம் அடைந்தனர்.
வீடு இடிந்து விழுந்தது
தானே மாவட்டம் பயந்தர் மேற்கு உத்தன் படான் பகுதியை சேர்ந்தவர் சுனிரா(வயது48). இவர் தனது மகள்களான சினேகல், டான்சி, சுவேதா, சான்யா ஆகியோருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 5 பேரும் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது பலத்த மழையின் காரணமாக அதிகாலை 4.15 மணி அளவில் வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து உறங்கி கொண்டிருந்த 5 பேர் மீதும் விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய 5 பேரும் காயமடைந்தனர்.
தாய் பலியான பரிதாபம்
தகவல் அறிந்த மிராபயந்தர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுனிரா போர்கஸ் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது 4 மகள்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.