தலையில்லாத பெண் உடல் மீட்கப்பட்ட வழக்கு்: கணவர் குடும்பத்தினர் மேலும் 2 பேர் கைது
வசாய் புய்காவ் கடற்கரையில் தலையில்லாத பெண் உடல் மீட்கப்பட்ட வழக்கில் கணவர் குடும்பத்தினர் 2 பேர் கைது;
மும்பை,
வசாய் புய்காவ் கடற்கரையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி போலீசார் தலையில்லாத பெண் உடலை மீட்டனர். இந்தநிலையில் உடல் மீட்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு பிறகு போலீசாருக்கு பிணமாக மீட்கப்பட்டவர் நாலச்சோப்ராவை சேர்ந்த சானியா சேக்(வயது26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சானியா சேக்கை கொலை செய்து தலையை துண்டித்து, உடலை மட்டும் டிராலி பேக்கில் வைத்து கழிமுக பகுதியில் வீசிய பெண்ணின் கணவர் ஆசிப் சேக்கை(31) கைது செய்தனர்.
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் கொலையில் குடும்பத்தினர் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பெண் கொலை வழக்கில் கணவர் குடும்பத்தை சோ்ந்த மேலும் 2 பேரை கைது செய்தனர்.