நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி - 2 பேருக்கு வலைவீச்சு

நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்;

Update: 2023-10-02 19:00 GMT

வசாய், 

பால்கர் மாவட்டம் மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலை நாக்சாரி பகுதியில் நகைக்கடை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் நகைக்கடை உரிமையாளர் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது, அவரை நெருங்கிய 2 பேரில் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் நகைக்கடை உரிமையாளரை நோக்கி சுட்டார். ஆனால் குறி தவறியதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நகைக்கடை உரிமையாளர் சத்தம்போட்டதால் 2 பேரும் இருட்டில் தப்பி ஓடிவிட்டனர். இது பற்றி அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிஓடிய 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்