வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்து வங்கதேச பெண்களை விபசாரத்தில் தள்ளிய கும்பல்; காட்டுக்குள் தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி பிடித்தனர்

வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்து வங்கதேச பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர். காட்டுக்குள் தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி பிடித்தனர்.;

Update: 2023-10-09 19:30 GMT

தானே, 

வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்து வங்கதேச பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர். காட்டுக்குள் தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி பிடித்தனர்.

7 பெண்கள் மீட்பு

வங்காளசேதத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியில் சட்டவிரோதமாக சிறைப்பிடிக்கப்பட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டோம்பிவிலி மான்பாடா போலீசார் இளம்பெண் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்ட இடத்துக்கு சென்றனர். அங்கு நடத்திய சோதனையின் போது, வீட்டில் அடைத்து வைத்து 19 வயது இளம்பெண் உள்பட 7 வங்கதேச பெண்களை ஒரு கும்பல் விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 7 வங்காள தேச பெண்களை மீட்டனர்.

6 பேர் கைது

வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து கும்பல் அந்த பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இந்தநிலையில் போலீசார் வந்ததை அறிந்து விபசார கும்பலை சேர்ந்தவர்கள் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடினர். இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு விடிய, விடிய தேடுதல் வேட்டை நடந்தது. இந்த வேட்டையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் வங்கதேசத்தை சேர்ந்த 24 முதல் 40 வயது வரை உள்ளவர்கள். அவர்களுக்கு வீடு வாடகைக்கு கொடுத்தவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்