இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த முன்னாள் போலீஸ்காரர் கைது

இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த முன்னாள் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-13 18:45 GMT

மும்பை, 

நவிமும்பையை சேர்ந்த இளம்பெண் கடந்த மாதம் 14-ந் தேதி நெருல் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் போலீஸ்காரர் என கூறி ஒருவர் அவரை கற்பழித்ததாக கூறியிருந்தார். புகார் குறித்து போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணை போலீஸ்காரர் என கூறி மிரட்டி கற்பழித்தது 38 வயது முன்னாள் போலீஸ்காரர் என்பது தெரியவந்தது.

முன்னாள் போலீஸ்காரர் கடந்த 2008-ம் ஆண்டு நவிமும்பை போலீசில் பணியில் சேர்ந்து இருக்கிறார். அவர் 2017-ம் ஆண்டு மிரட்டி பணம் பறித்தல், ஆள்கடத்தல் புகாரில் சிக்கி பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு வருகிற 16-ந் தேதி வரை முன்னாள் போலீஸ்காரரை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்