மும்பை விமான நிலையத்தில் 7 கிலோ போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது

மும்பை விமான நிலையத்தில் 6.9 கிலோ கொகைன் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-08 13:22 GMT

மும்பை,

மும்பை விமான நிலையத்தில் 6.9 கிலோ கொகைன் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.

கொகைன் பறிமுதல்

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பிரேசிலில் இருந்து தோகா வழியாக நேற்று முன்தினம் விமானம் ஒன்று வர இருந்தது. இதில் வரும் பெண் பயணி அதிகளவில் போதை பொருள் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக (டி.ஆர்.ஐ.) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் விமானத்தில் வந்த லாத்வியா நாட்டை சேர்ந்த ஆர்துர்ஸ் லியோ ஜின்பெர்க்சை பிடித்து சோதனை நடத்தினர்.

அப்போது அவரது டிராலி பேக்கில் இருந்து 6.9 கிலோ கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணை

இதையடுத்து அதிகாரிகள் வெளிநாட்டு பெண்ணை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டு அவரை 21-ந் தேதி வரை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. முதல் கட்ட விசாரணையில் பிடிப்பட்ட பெண் பணத்திற்காக போதை பொருளை கடத்தி வந்தது தெரியவந்து உள்ளது.

இதையடுத்து அதிகாரிகள் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்