மும்பை விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாவுடன் வெளிநாட்டு மாணவி கைது
மும்பை விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாவுடன் ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார்.;
மும்பை,
மும்பை விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாவுடன் ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார்.
ஜிம்பாப்வேயை சேர்ந்த மாணவி
ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த இளம்பெண் பிராகிரஸ் மரும்வா (வயது20). இவர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. படிப்பில் சேர்ந்து உள்ளார். எனவே கல்லூரியில் சேருவதற்காக அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஜிம்பாப்வேயில் இருந்து மும்பை சர்வதேச விமானநிலையம் வந்தார். அவர் மும்பையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் செல்ல இருந்தார்.
துப்பாக்கி தோட்டாவுடன் கைது
இந்தநிலையில் மும்பை விமான நிலையத்தில் நடந்த சோதனையின் போது, மாணவியின் பையில் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் மாணவியை சகார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து வெளிநாட்டு மாணவியை கைது செய்தனர். இந்தநிலையில் போலீசில் சிக்க வைக்க வேண்டும் என்றே யாரோ தனது பையில் துப்பாக்கி தோட்டாவை போட்டதாக மாணவி கூறியுள்ளார். எனவே மாணவியை சிக்க வைக்க வேறு யாரும் அவரது பையில் துப்பாக்கி தோட்டாவை போட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.