சூரியனில் ஆய்வுபணி மேற்கொள்வதற்கு முன்பு நாட்டின் வெங்காய பிரச்சினையில் கவனம் செலுத்துங்கள் - உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கூறுகிறது

சூரியனில் ஆய்வுபணி மேற்கொள்வதற்கு முன்பு முதலில் நாட்டில் வெங்காய பிரச்சினையில் கவனம் செலுத்துங்கள் என உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கூறியுள்ளது.

Update: 2023-08-25 19:15 GMT

மும்பை, 

சூரியனில் ஆய்வுபணி மேற்கொள்வதற்கு முன்பு முதலில் நாட்டில் வெங்காய பிரச்சினையில் கவனம் செலுத்துங்கள் என உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கூறியுள்ளது.

அதிகாரப்பூர்வ பத்திரிகை

நிலவில் ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தது. இந்த சாதனையை தொடர்ந்து அடுத்தக்கட்ட நகர்வுகளுக்கு விண்வெளி ஆராய்ச்சி மையம் தயாராகி வருகிறது. இதைத்தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்புவது, விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது போன்ற திட்டங்களை செய்ய உள்ளது. இதற்கிடையே நாசிக், அகமதுநகர் மற்றும் புனே மாவட்டங்களை சேர்ந்த வெங்காய உற்பத்தி செய்யும் விவசாயிகள் மத்திய அரசின் 40 சதவீத ஏற்றுமதி வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறி இருப்பதாவது:-

வெங்காய விலை

நாட்டு மக்கள் தற்போது நிலவு ஆய்வுபணி, சூரியன் ஆய்வுப்பணி மற்றும் வீனஸ் ஆய்வுப்பணி போன்ற புதிய ஆய்வு பணிகளில் மூழ்கி உள்ளனர். சூரியன் ஆய்வு திட்டமெல்லாம் பார்க்க நன்றாக தான் இருக்கிறது. ஆனால் மாநிலத்தில் வெங்காயத்தின் விலை உயர்வு பிரச்சினையை சரிசெய்வது அதைவிட முக்கியம். நீங்கள் சூரியனுக்கு ஒரு ஆய்வு பணியை மேற்கொள்ள இருக்கிறீர்கள். அதற்கு முன்பு வெங்காய பிரச்சினைக்கு தீர்வு எட்டுவதை உறுதி செய்யுங்கள். இல்லையெனில் 2024-ம் ஆண்டுக்கான உங்களின் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் வீணாகிவிடும். அதை நீங்கள் உணரக்கூட மாட்டீர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்