மும்பை,
இந்தி நடிகர் ஷாநவாஸ் பிரதான். இவர், 'பாண்டம்' என்ற படத்தில் ஹபீஸ் சயீத் கதாபாத்திரத்தில் நடித்தும், அலிப் லைலா தொலைக்காட்சி தொடரில் நடித்தும் பிரபலமானார். ரீஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற மிர்சாபூர் வெப் தொடரிலும் நடித்து இருந்தார். இதில் கோலு மற்றும் ஸ்வீட்டி குப்தாவின் தந்தை கதாபாத்திரத்தில் வந்தார்.
ஷாநவாஸ் பிரதான் மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி ஷாநவாஸ் பிரதான் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 56. ஷாநவாஸ் பிரதான் மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.